வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் "கார்த்திகை வாசம்" மலர்க் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு நாளை புதன்கிழமை (22.11.2023) பிற்பகல்-02.30 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகவுள்ளது.
நிகழ்வில் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.கெளரி முகுந்தன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரைகள் ஆற்றவுள்ளனர்.