யாழில் நாளை மின்தடைப்படும் இடங்கள்...

மின்சாரத் தொகுப்பு பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (19.11.2023) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஏழாலை, சங்கானை அரசடிச் சந்தி, சங்கானை சந்தை, நிச்சாமம், சங்கானை ஐஸ் தொழிற்சாலை, பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலகம்- மின்சார சபை, ஆளுநர் விடுதி, யாழ்.மாவட்டச் செயலகம், துளசி மஹால், யு.எஸ்.விடுதி, மருத்துவமனை வீதி, கச்சேரி- நல்லூர் வீதி, முலவை, பழைய பூங்கா வீதி, கொழும்புத்துறை வீதிச் சந்தி, வல்லை வீதி, சுப்பர் மடம், பாரதிதாசன் வாசிகசாலை, இன்பருட்டி, இன்பருட்டிப் பிள்ளையார் கோவில், அல்வாய் முத்துமாரியம்மன் கோவில், நாவலடி, ஸ்ரீலங்கா பாடசாலையடி, வியாபாரி மூலை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.                                                   

(செ.ரவிசாந்)