தேசியத்தில் சாதித்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களுக்கு நாளை கெளரவிப்பு விழா

அண்மையில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற அகில இலங்கைத் தமிழ்மொழித்தின இலக்கிய நாடகப் போட்டியில் நீண்ட காலத்தின் பின்னர் யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்றுத் தங்கம் வென்று சாதனை படைத்தனர். 

இவ்வாறு சாதனை படைத்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் நாடகக் குழுவினர் நாளை வியாழக்கிழமை(09.11.2023) கௌரவிக்கப்படவுள்ளனர். 

நாளை காலை-06.30 மணியளவில் மருதனார்மடம் சந்தியிருந்து சாதனை படைத்த நாடகக் குழுவினர் வரவேற்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்திலிருந்து பாண்ட் அணிவகுப்பு மரியாதையுடன் பாடசாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டு அதனைத் தொடர்ந்து காலை-08 மணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் கெளரவிப்பு விழா சிறப்புற நடைபெறும்.

(செ.ரவிசாந்)