ஊர்காவற்துறையில் நாளை இரத்ததான நிகழ்வு

தற்போதைய இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு ஊர்காவற்துறை ஆதார மருத்துவமனை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை  வியாழக்கிழமை(09.11.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல் வரை ஊர்காவற்துறைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.