யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இந்து இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி காலக் கலைவிழா நாளை புதன்கிழமை (08.11.2023) காலை-08.30 மணி முதல் மேற்படி கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் இடம்பெறவுள்ளது.
கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி. சி. செல்வமனோகரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
மேற்படி நிகழ்வில் தரம்-06 மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, நவமலர் நூல் வெளியீடு, பல்வேறு கலைநிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நடைபெறும்.