மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகைத் திருவிழா

 


வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(26.11.2023) திருக்கார்த்திகைத் திருவிழா சிறப்பாக இடம்பெறவுள்ளது.  

நாளை அதிகாலை 05:30 மணிக்கு உஷக்காலப் பூசை, காலை- 07:30 மணிக்கு 108 சங்காபிஷேகம், காலை-09:00 மணிக்கு காலைச்சந்திப் பூசை, காலை-09:45 மணிக்கு வசந்தமண்டபப் பூசை, தொடர்ந்து திருவிழா இடம்பெறும்.

முற்பகல்- 10:30 மணிக்கு சண்முகார்ச்சனை, நண்பகல்-12:00 மணிக்கு உச்சிக்காலப் பூசை, பிற்பகல்-12:30 மணிக்கு மகேஸ்வர பூசை, அன்னதானம், மாலை= 03:30 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை-05:00 மணிக்கு சாயரட்சைப் பூசை, மாலை-06:00 மணிக்கு சண்முகார்ச்சனை, மாலை-07:15 மணிக்கு இரண்டாம் காலப் பூசை, இரவு-07:30 மணிக்கு வசந்தமண்டப பூசை தொடர்ந்து திருவிழா, சொக்கப்பனை எரித்தல் , இரவு- 09:30 மணிக்கு அர்த்தசாமப் பூசை தொடர்ந்து திருவருட் பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறும்.

இதேவேளை, மாவைக் கந்தன் ஆலயம் அடியார்கள் வழிபாட்டிற்காக நாளை அதிகாலை-5:30 மணி முதல் இரவு- 9.30 மணி வரை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.