சாவகச்சேரிப் பிரதேச சபையின் நாவற்குழிப் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை(28.11.2023) மாலை-02 மணிக்கு கந்தையா கனகம்மா நினைவு மண்டபத்தில் சாவகச்சேரிப் பிரதேச சபையின் செயலாளர் க.சந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகத் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.ஜெகதாசனும், சிறப்பு விருந்தினராக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.செல்வராணி ஜெகதீசனும், கௌரவ விருந்தினர்களாக நாவற்குழி மகாவித்தியாலய அதிபர் சு.சிவானந்தன்,நாவற்குழி தெற்கு அ.த.க.பாடசாலை அதிபர் இ.கோகுலராகவன், இகைதடி கலைவாணி வித்தியாலய பதில் அதிபர் ந.கிருபாகரன், தனங்கிளப்பு அ.த.க.பாடசாலை அதிபர் க.உமாபாலன் மற்றும் கோயிலாக்கண்டி மகாலட்சுமி வித்தியாலய அதிபர் கு.தர்மகுமாரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேற்படி விழா நிகழ்வில் சஞ்சிகை வெளியீடு,இலவச அங்கத்துவம் வழங்கல், சுயமுயற்சியாளர் கௌரவிப்பு, நூல்கள் அன்பளிப்பாகப் பெறல், பரிசில் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.