சாவகச்சேரிப் பிரதேச சபையின் நாவற்குழிப் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை (28.11.2023) பிற்பகல்-02 மணியளவில் நாவற்குழியில் அமைந்துள்ள கந்தையா கனகம்மா நினைவு மண்டபத்தில் சாவகச்சேரிப் பிரதேச சபையின் செயலாளர் க.சந்திரகுமார் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.ஜெகதாசன் பிரதம விருந்தினராகவும், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.செல்வராணி ஜெகதீசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கலை நிகழ்வுகள், போட்டிகளில் பங்குபற்றியோருக்கான பரிசளிப்பு, கதிர் சஞ்சிகை வெளியீடு என்பன நடைபெற்றன.