இலங்கையில் முதல்முறையாக சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த நாடெங்கிலும் உள்ள சாயி நிலையங்கள் இணைந்து மேற்கொள்ளும் உன்னத சாதனையான மஹா ருத்ர சாதனை நிகழ்வு நாளை சனிக்கிழமை(02.12.2023) ஆரம்பமாகி எதிர்வரும்-10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை திருநெல்வேலியில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நாளை முதல் 09 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினமும் மாலை-05 மணி முதல் இரவு-08 மணி வரையும், நிறைவுநாளான எதிர்வரும்-10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை- 04.30 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரையும் மஹா ருத்ர சாதனை நடைபெறுமெனவும், அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்