உரும்பிராய் கற்பக விநாயகர் விநாயகர் விரத உற்சவம்

யாழ். உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய விநாயகர் விரத உற்சவம் கடந்த   செவ்வாய்க்கிழமை(28.11.2023) காலை-10 மணியளவில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது. 

தொடர்ந்தும் 21 தினங்களுக்கு இவ் ஆலய விநாயகர் விரத உற்சவம் இடம்பெறவுள்ளதுடன் அடுத்தமாதம்-18 ஆம் திகதி திங்கட்கிழமை விநாயகர் விரதப் பூர்த்தியுடன் நிறைவுபெறும். 

இதேவேளை, விநாயகர் விரத உற்சவத்தின் கஜமுகசூரன் போர் உற்சவம் எதிர்வரும்-17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறும்.  

(செ.ரவிசாந்)