யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை இரத்ததான முகாம் நிகழ்வுயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா நிறைவின் ஒரு கட்டமாக மேற்படி அலகினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (02.12.2023) காலை-10 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை பல்கலைக்கழகக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகில்  நடைபெறவுள்ளது. 

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.