தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து அடுத்த சில மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் புயலாக உருவாகும் எனத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புக்களில் கடலில் தொழில் மேற்கொள்பவர்கள் ஆபத்தானது. ஆகவே, மீனவர்கள் மற்றும் கடற்படைச் சமூகங்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம். இதுதொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அறிவித்தல்களை அவதானிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் வடக்கு- கிழக்கில் மழையுடனான காலநிலை இன்னும் சில நாட்களுக்குத் தொடருமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(செ.ரவிசாந்)