கோண்டாவிலில் நாளை ஆண்டு இறுதிக் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம், குமரன் விளையாட்டுக் கழகத்தின் ஆதரவில் இயங்கும் குட்டிச்சுட்டி முன்பள்ளி மற்றும் அகம் குழந்தைகள் பகல்நேரக் காப்பக மாணவர்களின் ஆண்டு இறுதிக் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நாளை சனிக்கிழமை(16.12.2023) காலை-08.30 மணி முதல் கோண்டாவில் சந்தியில் இயங்கி வரும் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன சனசமூக நிலையத்தின் தலைவர் து.சுதன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட உடற்கூற்றியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் மருத்துவர் திருமதி.சிவநந்தினி உதயகுமார் பிரதமவிருந்தினராகவும், வடக்கு மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவபாதரத்தினம் சிவசிவா, ஓய்வுநிலை அதிபர் சண்.வாமதேவன், இளைப்பாறிய பிரதி அதிபர் கலாபூஷணம் கே.எஸ்.சிவஞானராஜா, குமரன் விளையாட்டுக் கிளையின் கனடாக் கிளையின் முன்னாள் தலைவர் சுப்பிரமணியம் ஜெயதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். 

(செ.ரவிசாந்)