பொதுமருத்துவ நிபுணர் ரகுபதியின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலும் இரத்ததான முகாமும்

 


இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் மருத்துவர் ரகுபதி அறக்கட்டளையின் அனுசரணையில் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையின் முன்னாள் பொதுமருத்துவ நிபுணர் அமரர். அம்பலவாணர் ரகுபதியின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளைசனிக்கிழமை(16.12.2023) காலை-08.30 மணியளவில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவரது நினைவாக இரத்ததான முகாம் நிகழ்வு காலை-09 மணி முதல் இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெறும்.

இதேவேளை, குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர். 

(செ.ரவிசாந்)