கற்பகப் பிள்ளையார் முன்பள்ளிச் சிறார்களின் மழலைகள் கலைவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(24.12.2023) பிற்பகல்-02 மணிக்கு இருபாலை கற்பக விநாயகர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள முழுமதி சனசமூக நிலைய அரங்கத்தில் முன்பள்ளி முகாமைத்துவத் தலைவி திருமதி.வெ.அமிர்தாம்பிகை தலைமையில் நடைபெறவுள்ளது.
விழாவில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.