அராலியில் நாளை சுனாமிப் பேரலை ஞாபகார்த்தமாக இரத்ததான முகாம்

அராலி தெற்கு சைவத்தமிழ் இளைஞர் மன்றத்தினர் சுனாமிப் பேரலை ஞாபகார்த்தமாக வருடாந்தம்  முன்னெடுக்கும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(24.12.2023) காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை அராலி தெற்கு கரைப் பிட்டிப் பிள்ளையார் ஆலயத்தடியில் இயங்கி வரும்  கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களும், ஆர்வலர்களும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானம் செய்து இன்னுயிர் காக்க முன்வருமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர். 

(செ.ரவிசாந்)