குரும்பசிட்டி முத்துமாரி அம்மனுக்கு மஹோற்சவம்

பிரசித்திபெற்ற யாழ்.குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் திருவெம்பாவை விரத நாளான கடந்த திங்கட்கிழமை(18.12.2023) காலை-10 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெற்று வருகிறது. மஹோற்சவத்தில் எதிர்வரும்-25 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை-10 மணியளவில் தீர்த்தவாரி உற்சவமும், அன்றையதினம் இரவு-07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். 


(செ.ரவிசாந்)