யாழ்.மாநகரசபையின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(22.12.2023) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
மேற்படி விழாவில் யாழ்.மாநகரசபையின் பிரதம கணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா, யாழ்.மாநகரசபையின் சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் த.பாலமுரளி, யாழ்.மாநகரசபையின் பிரதம பொறியியலாளர் எந்திரி இ.சுரேஸ்குமார், யாழ்.மாநகரசபையின் பிரதம சித்த மருத்துவ அதிகாரி மருத்துவர் ச.கணேசன், யாழ்.மாநகரசபையின் பிரதி ஆணையாளர் வே.ஆயகுலன், யாழ்.மாநகரசபையின் கணக்காளர் க.ஜதீசன், யாழ்.மாநகரசபையின் செயலாளர் த.தயாளன், யாழ்ப்பாணப் பொதுநூலகப் பிரதம நூலகர் திருமதி.சி.அனுசியா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.