மறைந்த நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசனின் நான்காவது ஆண்டு நினைவு வைபவமும் நினைவுப் பேருரையும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை(21.12.2023) பிற்பகல்-02 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக சமூகத்தின் ஏற்பாட்டில் பதில் நூலகர் கலாநிதி.திருமதி.க.சந்திரசேகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்புரை ஆற்றவுள்ளதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகைசார் வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.
(செ.ரவிசாந்)