சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை நடாத்தும் வருடாந்த திருவாசக விழா நாளை செவ்வாய்க்கிழமை (26.12.2023) காலை-09.30 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் ஆசியுரை, அறிமுகவுரை, சிறப்புச் சொற்பொழிவு, இசை நாவரசு எம்.எஸ்.பிரதீபன் குழுவினரின் திருவாசக இசை, சிறுப்பிட்டி நாகதம்பிரான் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வு என்பன இடம்பெறும்.