யாழ்.குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் கற்றல் அலகுகள் திறப்பு நிகழ்வும் நாளை வெள்ளிக்கிழமை(29.12.2023) காலை-09 மணி முதல் மேற்படி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை அதிபர் சி.சிவகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சு.ஸ்ரீகுமரன் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை வடமாகாணப் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன், வலிகாமம் வலயக் கல்வி அலுவலக நடன பாட ஆசிரிய ஆலோசகர்களான திருமதி.சுபத்திரா கந்தகுமார், திருமதி.ஸ்ரீதேவி கண்ணதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.