குப்பிழானில் நாளை வருடாந்த திருவாசக முற்றோதல்

குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த திருவாசக முற்றோதல் நிகழ்வு நாளை சனிக்கிழமை(30.12.2023)  நடைபெறவுள்ளது.

நாளை அதிகாலை-05.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்வு இடம்பெறுவதுடன் மதியம் அடியவர்களுக்கு மகேஸ்வர பூசை(அன்னதானம்) வழங்கப்படுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.