நாவற்குழியில் நாளை வருடாந்த திருவாசக முற்றோதல்

இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் வருடாந்த திருவாசக முற்றோதல் நிகழ்வு நாளை சனிக்கிழமை (30.12.2023) காலை-08 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் நடைபெறவுள்ளது.

மேற்படி திருவாசக முற்றோதல் நிகழ்வில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு உணவு மற்றும் தேநீர் ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டியுள்ளமையால் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் 0779236552 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்கள் வரவைத் தவறாது உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையினர் கேட்டுள்ளனர். 

(செ.ரவிசாந்)