அலெக்ஸின் மரணத்திற்கு நீதி கோரி நாளை வட்டுக்கோட்டையில் கண்டனப் போராட்டம்

வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸின் மரணத்திற்கு நீதி கோரியும், வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்டவிரோத சித்திரவதைகளைத் தடுத்து  நிறுத்துமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை(03.12.2023) மாலை-03 மணியளவில் வட்டுக்கோட்டைச் சந்தியில் கண்டனப் போராட்டமொன்று நடாத்தப்படவுள்ளது.

இந்தக் கண்டனப் போராட்டத்தில் அனைவரும் திரண்டு எதிர்ப்பினை வெளியிடுவதன் மூலம் நீதிக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.