கோண்டாவிலில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்


கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும், குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(10.12.2023) காலை-08.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரை  கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள குட்டிச் சுட்டி முன்பள்ளியில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கும் அனைவருக்கும் பெறுமதியான ஊக்குவிப்புப் பரிசில் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்களையும் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

(செ.ரவிசாந்)