சண்டிலிப்பாயில் அகில இலங்கை திருவள்ளுவர் மகாசபையின் 74 ஆவது மாநாடு


அகில இலங்கை திருவள்ளுவர் மகாசபையின் 74 ஆவது வருடாந்த மாநாடும் கல்விசார் ஊக்குவிப்பு வழங்கலும் கெளரவிப்பு நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை(21.01.2024) காலை-09 மணியளவில் சண்டிலிப்பாய் மத்தி இளங்கதிர் சனசமூக நிலைய மண்டபத்தில் அகில இலங்கை திருவள்ளுவர் மகாசபையின் தலைவர் நாகன் கிருஷ்ணபிள்ளை தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் பண்டத்தரிப்பு மக்கள் வங்கியின் முகாமையாளர் திருமதி.புஷாலினி தியாகராசா பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்வில் மகாசபை சேவைக்காக கெளரவிப்பு, மூத்தோர் கெளரவிப்பு, கல்விச் சாதனையாளர்கள் கெளரவிப்பு, கல்விசார் ஊக்குவிப்பு உதவி வழங்கல் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெறும். 

(செ.ரவிசாந்)