ஆறுதல் நிறுவனத்தின் ஸ்தாபகரும், முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளருமான அமரர்.சுந்தரம் டிவகலாலாவின் முதலாம் ஆண்டு நினைவுதின வைபவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(21.01.2024) காலை-09.30 மணி முதல் யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் வவுனியாப் பல்கலைக்கழக வேந்தர் சு.மோகனதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறைத் தலைவர் பேராசிரியர். ஜெ.இராசநாயகம் "எதிர்கால நோக்கில் இலங்கையில் முன்பள்ளிக் கல்விச் செயற்பாடுகளும் இன்றைய நடைமுறைகளும்" எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார்.