சந்நிதியான் ஆச்சிரமத்தில் நாளை வருடாந்த திருவாசக முற்றோதல்

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வருடாந்த திருவாசக முற்றோதல் நிகழ்வு நாளை புதன்கிழமை(03.01.2024) காலை-09.30 மணி முதல் மாலை-04 மணி வரை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  

மேற்படி திருவாசக முற்றோதல் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார். 

(செ.ரவிசாந்)