வடலியடைப்பு பாரத்தனை ஐயனார் ஆலயத்தில் நாளை திருவாசக முற்றோதல்

யாழ். வடலியடைப்பு பாரத்தனை ஐயனார் ஆலயத்தில் நாளை புதன்கிழமை (03.01.2024) வருடாந்த திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

நாளை அதிகாலை-05.30 மணியளவில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி மதியம்-01 மணி வரை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

இதேவேளை,  மாதம் தோறும் உத்தர நட்சத் தினத்தன்று மேற்படி ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.