நாவற்குழி திருவாசக அரண்மனையில் வருடாந்த திருவாசக முற்றோதல்: அனைவருக்கும் சான்றிதழ்

இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் வருடாந்த திருவாசக முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை (30.12.2023) காலை-08.30 மணியளவில் நாவற்குழியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருவாசக அரண்மனையில் விசேட வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

பிற்பகல்-02.15 மணி வரை இலங்கை முதல் உதவிச் சங்கத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ் தலைமையில் நடைபெற்ற திருவாசக முற்றோதல் நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் கவிமணி க.ஆனந்தராசா, மூத்த ஆன்மீகவாதி இராசையா ஸ்ரீதரன்,  காரைநகர் திருமூலர் ஆச்சிரமப் பொறுப்பாளர் க.நாகரத்தினம் உள்ளிட்ட அடியவர்கள் பலரும் கலந்து கொண்டு திருவாசகம் முழுவதையும் பண்ணுடன் மெய்யுருக ஓதினர்.


இதேவேளை, திருவாசக முற்றோதல் நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (செ.ரவிசாந்)