கோண்டாவிலில் புரட்சிக் கலைஞருக்கு அஞ்சலி

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் அரங்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(31.12.2023) மாலை யாழ்.கோண்டாவில் அமைந்துள்ள வேதபாராயண சனசமூக நிலைய மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அண்மையில் காலமான தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டப் பற்றாளரும், தென்னிந்தியாவின் முன்னணி சினிமா நடிகருமான புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தலைமையுரையைத் தொடர்ந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.  


(செ.ரவிசாந்)