நாய்களுக்கான விசர் தடுப்பு மருந்தேற்றல் மல்லாகத்தில் நாளை ஆரம்பம்

 


நாய்களுக்கான விசர் தடுப்பு மருந்தேற்றல் மல்லாகம் பொதுச் சுகாதாரப்பிரிவில் அமைந்துள்ள மல்லாகம் தெற்கு கல்லாரை சனசமுக நிலையத்தில் நாளை வியாழக்கிழமை(18.01.2024) ஆரம்பமாகவுள்ளது.  

கடந்த வருடம் யாழ்.மாவட்டத்திலேயே அதிக விலங்கு விசர்நோய் இறப்புக்கள் ஏற்பட்டுள்ளமையால் தவறாது அனைத்து வளர்ப்பு மற்றும் தெருவோர நாய்களுக்கும் தடுப்பு மருந்தேற்ற அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உதவுமாறு தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.