தொண்டைமானாறில் நாளை இரத்ததான முகாம்


செல்வச்சந்நிதி கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (06.01.2024) காலை-09 மணி தொடக்கம் மதியம்-01 மணி வரை செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அருகில் உள்ள தொண்டைமானாறு தெற்குப் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும்,  ஆர்வலர்களையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர். மேலதிக தகவல்களுக்கு 0771566384, 0757116329 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(செ.ரவிசாந்)