கோண்டாவில் மகாகாளி அம்பாள் மகா கும்பாபிஷேகம்: கிரியைகள் ஆரம்பம்

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ மகாகாளி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை (24.01.2024) அதிகாலை-05.45 மணி தொடக்கம் காலை-07.37 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.  

இவ் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை (22.01.2024) காலை-06 மணியளவில் ஆரம்பமானது. 

இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை(23.01.2024) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.   

(செ.ரவிசாந்)