உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியம் நடாத்தும் இலவச சதுரங்கப் பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை(22.01.2024) பிற்பகல் உரும்பிராயில் அமைந்துள்ள மேற்படி ஒன்றியத்தின் தலைமைச் செயலகத்தில் ஆரம்பமானது.
இப் பயிற்சி நெறியில் உரும்பிராய்ப் பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம்-03 முதல் தரம்-10 மணி வரையான மாணவ, மாணவிகள் பங்குபற்ற முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0212229121 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.