தெல்லிப்பழையில் நாளை முதியோர் இயல்பு வாழ்வு இல்லத் திறப்பு விழா

தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட முதியோர் இயல்பு வாழ்வு இல்லத் திறப்பு விழா நாளை வியாழக்கிழமை (25.01.2024) மாலை-04 மணி முதல் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் தலைவர் ஆ.சுதன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் நன்கொடையாளர் கணேசலிங்கம் தம்பதிகள் பிரதம விருந்தினராகவும், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் திருமதி.சுதீஸ்னர் சிவகங்கா, வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி.தேவநந்தினி பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், வைத்தியசாலையின் காணி நன்கொடையாளர் திருமதி.கனகரத்தினம் மகேஸ்வரி கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.