மாவிட்டபுரம் கந்தன் புதிய திருமஞ்ச வெள்ளோட்ட வீதி உலா


வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலுக்கெனப் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வெள்ளோட்ட விழா இன்று புதன்கிழமை (24.01.2024) முற்பகல் சிறப்பாக நடைபெற்றது.

தைப்பூச நன்னாளான நாளை வியாழக்கிழமை(25.01.2024) மாலை-06 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து மாவைக் கந்தப் பெருமான் புதிய திருமஞ்சத்தில் உலா வருவார் என மாவை ஆதீனகர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

தைப்பூசத் திருநாளான நாளை மாலை-03 மணியளவில் அடியவர்கள் அடியவர்கள் பால் காவடி எடுப்பதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பால்காவடி எடுக்கும் அடியவர்கள் ஆலய ரதவீதி ஊடாக வலம் வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே,  பால்குட பவனியில் பங்குகொள்ள விரும்பும் அடியவர்கள் நாளை மாலை-03 மணிக்கு முன்னர் ஆலயத்திற்கு வருகை தந்து பால்காவடியில் பங்குகொள்ள முடியும். 

முருகப் பெருமான் அடியவர்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து தைப்பூச நாளில் மாவைக் கந்தனின் திருமஞ்சம் வடம்பிடித்து இஷ்டசித்திகள் பெற்று உய்யுமாறும்  மாவை ஆதீனகர்த்தா அழைப்பு விடுத்துள்ளார். 

(செ.ரவிசாந்)