இணுவில் கந்தன் தைப்பூசப் பெருமஞ்சத் திருவிழா: ஆலயச் சூழல் விழாக் கோலம்வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவிலின் தைப்பூசப் பெருமஞ்சத் திருவிழா நாளை வியாழக்கிழமை (25.01.2024) சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் மற்றும் அண்டிய பகுதிகள்   விழாக் கோலம் பூண்டுள்ளது.

காலைப் பூசையைத் தொடர்ந்து இணுவில் மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்திலிருந்து நாளை காலை-06 மணியளவில் பால்குடப்பவனி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து காலை-09 மணிக்கு மாபெரும் பொங்கல் விழா ஆலய முன்றலில் ஆரம்பமாகும். 

வசந்தமண்டபப் பூசை நாளை மாலை-06 மணிக்கு ஆரம்பமாகி மாலை-06.30 மணிக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த உலகப் பெருமஞ்சத்தில் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வீதி வலம் வரும் காட்சி நடைபெறும். 

(செ.ரவிசாந்)