தெல்லிப்பழை மகாதனை கோணாசீமா ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை(24.01.2024) காலை-09.50 மணி முதல் முற்பகல்-10.50 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(22.01.2024) காலை-06.35 மணி முதல் காலை-07.35 மணி வரையான காலப் பகுதிக்குள் ஆரம்பமானது.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை(23.01.2024) காலை-06.00 மணி முதல் மாலை- 04.00 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)