தைப்பொங்கலை முன்னிட்டு ஏழாலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை(15.01.2024) காலை-08 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை ஏழாலை தெற்கு ராஜ்குமார் கடையடிக்கு அருகில்  அமைந்துள்ள தனியார் வர்த்தக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும்  தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)