நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பொங்கல் உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தைப்பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(15.01.2024) இடம்பெறவுள்ளது.

நாளை காலை-08.15 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து முற்பகல்-10.15 மணியளவில் சூர்யோற்சவம் வசந்தமண்டபப் பூசையுடன் ஆரம்பமாகித் தொடர்ந்து சூரியபகவான் துணைவியார்கள் சகிதம் உள்வீதியுலா உலா வருகை தருவார்.