வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்டப் பண்பாட்டுப் பேரவையும் யாழ்.மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்டப் பண்பாட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை (30.01.2024) பிற்பகல்-02 மணியளவில் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ், சாகித்திய ரத்னா கனகரத்தினம் சட்டநாதன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
(செ.ரவிசாந்)