யாழ்.மாவட்டச் செயலகத்தில் புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு


யாழ்.மாவட்டச் செயலகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை(01.01.2024) காலை யாழ்.மாவட்டச் செயலக முன்றலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றது.

"வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வரவில் சிறந்த உத்தியோகத்தர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.