மருதனார்மடத்தில் நாளை மிருதங்க அவைக்காற்றுகை


மிருதங்க வித்துவான் கலாபூஷணம் எ.கணேஷ சர்மாவின் பேரனும், மிருதங்க வித்துவான் சுவாமிநாதன் சர்மாவின் புதல்வனும், மாணவனும், உலகப் புகழ்பெற்ற மிருதங்கச் சக்கரவர்த்தி ஸ்ரீ உமையாள்புரம் கே.சிவராமனின் மாணவனுமான எஸ். அனந்தநாராயணன் சர்மாவின் மிருதங்க அவைக்காற்றுகை நிகழ்வு நாளை சனிக்கிழமை(20.01.2024) முற்பகல்-10.30 மணி முதல் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.