யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை சமனற்ற நீதி நூல் வெளியீட்டு விழா

அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு காலத்தில் கோலோச்சிய ஈழத்தமிழரான ராஜ் ராஜரட்ணம் எழுதிய  சமனற்ற நீதி நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் சனிக்கிழமை(20.01.2024) பிற்பகல்-02.45 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஹூவர் அரங்கில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.கோசலை மதன், சட்டத்தரணி கலாநிதி.குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் சிறப்புரைகளையும், நூலாசிரியர் ஏற்புரையையும் ஆற்றவுள்ளனர். 

(செ.ரவிசாந்)