யாழ்.பண்ணைக் கடற்கரையில் நாளை மாபெரும் காணும் பொங்கல் விழா

யாழ்.மாநகர சபையும் மக்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் காணும் பொங்கல் விழா-2024 நாளை சனிக்கிழமை (20.01.2024) பிற்பகல்-02.30 மணி முதல் யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் கோலப் போட்டி பாரம்பரிய மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அத்துடன் தமிழர் பண்டிகைகளைக் கொண்டாடும் நடைமுறைகளில் ஏற்படும் மாற்றம் வரவேற்கத்தக்கது- அல்ல எனும் தலைப்பில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசனை நடுவராகக் கொண்ட சிறப்புப் பட்டிமன்றமும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.  

(செ.ரவிசாந்)