சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலாளரின் சேவை நலன் பாராட்டு விழா


சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடந்த 11.05.2015 இலிருந்து இதுவரை காலமும் கடமையாற்றிய திருமதி.யசோதா உதயகுமாரின் சேவை நலன் பாராட்டு விழா நாளை வெள்ளிக்கிழமை (05.01.2024) பிற்பகல்-01 மணியளவில் மேற்படி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.