தெல்லிப்பழைப் பிரதேச செயலாளரின் சேவை நலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை வைபவமும்

தெல்லிப்பழைப் பிரதேச செயலாளராக கடந்த-08.05.2017 முதல் கடமையாற்றி வரும் சண்முகராஜா சிவஸ்ரீயின் சேவை நலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை வைபவமும் நாளை வெள்ளிக்கிழமை (05.01.2024) காலை-09 மணி முதல் மேற்படி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தெல்லிப்பழைப் பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் வீரசிங்கம் சிவகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், ஈழத்து எழுத்தாளரும், உளவளத் துணையாளருமான திருமதி.கோகிலா மகேந்திரன், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி ப.நந்தகுமார், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன், யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் அதிபர் ம.மணிசேகரன், யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் அதிபர் தி.வரதன், யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் அதிபர் வி.ரி. ஜெயந்தன், யாழ்.அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் நா.கேதீஸ்வரன், அளவெட்டி மகாஜனசபையின் தலைவர் வை.சுப்பிரமணியம் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர். 

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் நிகழ்வில் கலந்து கொண்டு ஆசியுரை வழங்குவார்.   

(செ.ரவிசாந்)