காங்சேன்துறை- நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவை மீளவும் ஆரம்பம்

இலங்கை- இந்தியா இடையிலான பயணிகள் படகுச் சேவையை எதிர்வரும்-15 ஆம் திகதி முதல் மீளவும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாகத் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

யாழ்.காங்சேன்துறையிலிருந்து தமிழகத்தின் நாகப்பட்டினம் வரை இந்தப் படகுச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

நான்கு தசாப்தங்களின் பின்னர் குறித்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் மாதம்- 14 ஆம் திகதி மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் வட-கிழக்குப் பருவ மழையின் காரணமாக பயணிகள் கப்பல் சேவையை ஒக்டோபர்- 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.