தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளரானார் குகதாசன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மற்றும் பொதுச் சபைக்  கூட்டம் இன்று சனிக்கிழமை(27.01.2024) காலை திருகோணமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவ தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் திருகோணமலையைச் சேர்ந்த சண்முகம் குகதாசன் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட சண்முகம் குகதாசன் இரண்டு தடவைகள் தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளைத் தலைவராகப் பதவி வகித்துள்ளதுடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.